search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் பதவி"

    • பிரதமர் ஆவது என் வாழ்வின் குறிக்கோள் அல்ல என்றார்.
    • நம்பிக்கைக்கும், எனது அமைப்புக்கும் விசுவாசமாக இருக்கிறேன் என தெரிவித்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மந்திரி நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    பிரதமர் பதவிக்கான போட்டியில் ஒரு அரசியல் தலைவர் என்னை ஆதரிக்க முன்வந்தார். ஆனால் அவரது அந்த லட்சியத்திற்கு நான் செவி சாய்க்கவில்லை.

    எனக்கு ஒரு சம்பவம் நினைவிருக்கிறது. நான் யாரையும் பெயரிட மாட்டேன். நீங்கள் பிரதமராகப் போகிறீர்கள் என்றால் நாங்கள் ஆதரவு அளிப்போம் என அந்த நபர் கூறினார்.

    நீங்கள் ஏன் என்னை ஆதரிக்க வேண்டும், உங்கள் ஆதரவை நான் ஏன் எடுக்கவேண்டும் என்று கேட்டேன். பிரதமர் ஆவது என் வாழ்வின் குறிக்கோள் அல்ல. எனது நம்பிக்கைக்கும் எனது அமைப்புக்கும் நான் விசுவாசமாக இருக்கிறேன், அதற்காக நான் சமரசம் செய்யப் போவதில்லை என தெரிவித்தார்.

    இந்த உரையாடல் எப்போது நடந்தது என்பதை நிதின் கட்கரி குறிப்பிடவில்லை.

    • பிரதமராக மோடி 3-வது முறையாகப் பதவியேற்றுள்ளார்.
    • ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் மத்திய மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது.

    கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ள நிலையில் நேற்று முன் தினம் நடைபெற்ற என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கூட்டம் முடிந்த பின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த மோடி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார்.

    இதனை தொடர்ந்து இன்று (ஜூன் 9) இரவு 7.15 மணிளவில் பிரதமராக மோடி 3-வது முறையாகப் பதவியேற்றுள்ளார்.

    இந்நிலையில், ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் மத்திய மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    இதனையடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமன் மீண்டும் மத்திய மந்திரியாக பதிவியேற்று கொண்டார்.

    இந்திய வரலாற்றில் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து 3 வது முறை பிரதமராகும் பெருமையை மோடி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
    • நேருவுக்கு பிறகு தொடர்ந்து 3 வது முறை பிரதமராகும் பெருமையை மோடி பெற்றுள்ளார்.

    மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது.

    கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ள நிலையில் நேற்று முன் தினம் நடைபெற்ற என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கூட்டம் முடிந்த பின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த மோடி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார்.

    இதனை தொடர்ந்து இன்று (ஜூன் 9) இரவு 7.15 மணிளவில் பிரதமராக மோடி 3-வது முறையாகப் பதவியேற்றுள்ளார்.

    குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், 7.15 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்வி 8.00 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் நடைபெறுகிறது.

    இந்திய வரலாற்றில் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து 3 வது முறை பிரதமராகும் பெருமையை மோடி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரதமர் பதவி மீது ஆசையா? என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய மந்திரி நிதின் கட்காரி அப்படி எந்த ஆசையும் தனக்கு இல்லை என்று பதிலளித்துள்ளார். #NitinGadkari
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான நிதின் கட்காரி பிரதமர் பதவிக்கு வரக்கூடும் என ஊக செய்திகள் வெளியாகி உள்ளன.



    இதுபற்றி அவரிடம் செய்தி நிறுவனம் ஒன்று கேள்வி எழுப்பியது.

    அப்போது அவர், ‘‘நான் எந்த கணக்கும் போட வில்லை. இலக்குகளும் நிர்ணயிக்கவில்லை. இது அரசியலுக்கும் பொருந்தும், எனது பணிகளுக்கும் பொருந்தும். எனக்கு என்று ஒதுக்கப்பட்டதை நிறைவேற்றி உள்ளேன். நாட்டுக்கு என்னால் ஆன சிறந்தவற்றை செய்வதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்’’ என பதில் அளித்தார்.

    மேலும், ‘‘பிரதமர் பதவி மீது எனக்கு ஆசை இல்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் அந்த எண்ணம் இல்லை. நாடு தான் எனக்கு பெரியது. எனக்கு கனவுகள் இல்லை. நான் யாரிடமும் போய் நிற்க மாட்டேன். ஆதரவு தேடவும் மாட்டேன். நான் போட்டியிலும் இல்லை. நான் இதை எனது இதயத்தில் இருந்து சொல்கிறேன்’’ எனவும் கூறினார். #NitinGadkari
    கர்நாடகாவில் மத சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் ஒட்டு போட்டு 22 தொகுதிகளை கைப்பற்றினால் தேவேகவுடா பிரதமர் ஆவார் என குமாரசாமி கூறியுள்ளார். #kumaraswamy #DeveGowda
    மாண்டியா:

    கர்நாடகா மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    கர்நாடக முதல் மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தள மாநில தலைவருமான குமாரசாமி மாண்டியாவில் ரூ.5 ஆயிரம் கோடி நலத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இது அவரது தேர்தல் பிரசார தொடக்கமாக கருதப்படுகிறது. விழாவில் குமாரசாமி பேசியதாவது:-

    கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் பிரதமராகும் உகந்த சூழ்நிலை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. மத சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் ஒட்டு போட்டு 22 தொகுதிகளை கைப்பற்றினால் கர்நாடகாவை சேர்ந்தவர் பிரதமர் நாற்காலியில் அமரலாம். 1996-ல் இருந்த அரசியல் சூழ்நிலை போலவே தற்போது உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். தனது தந்தையான தேவேகவுடா மீண்டும் பிரதமர் பதவிக்கு தயாராக இருப்பதாக குமாரசாமி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். தேவேகவுடா 1996 ஜூன் முதல் 1997 ஏப்ரல் வரை பிரதமராக பணியாற்றினார். #kumaraswamy #DeveGowda
    தாய்லாந்து நாட்டின் பிரதமர் பதவிக்கான தேர்தலில் அந்நாட்டின் இளவரசி போட்டியிட அனுமதிக்க வேண்டாமென மன்னர் வஜ்ரலோங்கோனி தடை விதித்துள்ளார். #ThaiPMelection #Ubolratana #MahaVajiralongkorn
    பாங்காக்:

    தாய்லாந்து நாட்டில் 1932-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் அங்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி கவிழ்க்கப்படுவதும், ராணுவம் அரியணை ஏறுவதும் தொடர்கதையாக உள்ளது.
     
    அந்த வகையில், கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் யிங்லக் ஷினவத்ரா அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. பிரதமரை பதவி விலகக்கோரி நடந்த போராட்டங்களில் பெரும் வன்முறை வெடித்தது.

    இதற்கிடையில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் யிங்லக் ஷினவத்ராவின் பிரதமர் பதவியை பறித்து அந்நாட்டு அரசியல் சாசன கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதனைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக வர்த்தக மந்திரி நிவாட்டம்ராங் பூன்சாங் நியமிக்கப்பட்டார். ஆனால், நாட்டில் வலிமையான தலைமை இல்லாததால் பெரும் அரசியல் குழப்பம் எழுந்தது.

    இதையடுத்து அந்நாட்டின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ராணுவ தளபதியாக இருந்த பிரயாட் சான்ஓசா பிரதமராக பொறுப்பேற்றார். நாட்டின் சட்டம், ஒழுங்கு சரியாகும் வரை மட்டுமே ராணுவ ஆட்சி அமலில் இருக்கும் என கூறிய நிலையில் அங்கு ராணுவ ஆட்சியே தொடர்ந்தது.

    பொதுத்தேர்தலை நடத்தி ஜனநாயக ஆட்சியை கொண்டு வர வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் குதித்தனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் பொதுத்தேர்தலை நடத்தும்படி கடந்த மாதம் மன்னர் மகா வஜ்ரலோங்கோன் ஆணை பிறப்பித்தார். அதனைதொடர்ந்தது பிப்ரவரி மாதம் 24-ந்தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    ஆனால் சில காரணங்களால் பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி 500 உறுப்பினர்களை கொண்டு தாய்லாந்து நாடாளுமன்றத்துக்கு அடுத்த மார்ச் 24-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் பொதுத்தேர்தல் என்பதால் அரசியல் கட்சியினரிடமும், தாய்லாந்து மக்களிடமும் இந்த தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

    வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று தாய்லாந்து இளவரசி உபோல்ரட்டனா பிரதமர் பதவிக்காக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    முன்னாள் பிரதமர்கள் யிங்லக் ஷினவத்ரா, தாக்‌ஷின் ஷினவத்ரா ஆகியோருக்கு ஆதரவாக தொடங்கப்பட்ட புதிய கட்சியான தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு (தாய் ரக்சா சார்ட்) கட்சியின் வேட்பாளராக அவர் களமிறங்கினார். உபோல்ரட்டனா மஹிடோல் முன்னாள் மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜின் கடைசி மகளும், தற்போதைய மன்னர் மஹா வஜ்ரலோங்கோர்னின் மூத்த சகோதரியும் ஆவார்.



    இளவரசி உபோல்ரட்டனா பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்த சில மணி நேரத்தில் தற்போதைய பிரதமர் பிரயாட் சான்ஓசா தானும் களத்தில் இருப்பதாக அறிவித்தார்.

    இதனால் இந்த பொதுத்தேர்தல் முன் எப்போதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்ட நிலையில் இளவரசி உபோல்ரட்டனா பிரதமர் பதவிக்கு போட்டியிட கூடாது என தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு கட்சிக்கு மன்னர் மஹா வஜ்ரலோங்கோர்ன் நேற்றிரவு உத்தரவிட்டார்.

    மன்னரின் உத்தரவுக்கு மதிப்பளித்தும், அரண்மனைக்கு விசுவாசமாகவும் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இளவரசி உபோல்ரட்டனா திரும்பப்பெறப்படுவதாக தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு கட்சி இன்று அறிவித்துள்ளது.

    தாய்லாந்தில் வழக்கமாக மன்னர் குடும்பத்தின் பெண்கள் அவ்வளவாக பொதுவெளியில் பேசப்படாத நிலை சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை நீடித்து வந்தது. ஆனால், அந்த மரபுகளை எல்லாம் தகர்த்தெறிந்த இளவரசி  உபோல்ரட்டனா மஹிடோல் அந்நாட்டின் பிரபல சினிமா நடிகையாக விளங்கினார். இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் இவருக்கு சுமார் ஒரு லட்சம் அபிமானிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ThaiPMelection #Ubolratana #MahaVajiralongkorn
    ராணுவ ஆட்சி நடைபெறும் தாய்லாந்தில் அடுத்த மாதம் பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில் பிரதமர் பதவிக்கு அந்நாட்டின் இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் போட்டியிடுகிறார். #UbolratanaMahidol
    பாங்காக்:

    தாய்லாந்தில் 1932-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் ஆட்சி கவிழ்க்கப்படுவதும், ராணுவம் அரியணை ஏறுவதும் தொடர்கதையாக உள்ளது.

    அந்த வகையில், கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் யிங்லக் ஷினவத்ரா அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. பிரதமரை பதவி விலகக்கோரி நடந்த போராட்டங்களில் பெரும் வன்முறை வெடித்தது.

    இதற்கிடையில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் யிங்லக் ஷினவத்ராவின் பிரதமர் பதவியை பறித்து அந்நாட்டு அரசியல் சாசன கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதனைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக வர்த்தக மந்திரி நிவாட்டம்ராங் பூன்சாங் நியமிக்கப்பட்டார். ஆனால் வலுவான தலைமை இல்லாததால் பெரும் அரசியல் குழப்பம் எழுந்தது.

    இதையடுத்து அந்நாட்டின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ராணுவ தளபதியாக இருந்த பிரயாட் சான்ஓசா பிரதமராக பொறுப்பேற்றார். நாட்டின் சட்டம், ஒழுங்கு சரியாகும் வரை மட்டுமே ராணுவ ஆட்சி அமலில் இருக்கும் என கூறிய நிலையில் அங்கு ராணுவ ஆட்சியே தொடர்ந்தது.

    பொதுத்தேர்தலை நடத்தி ஜனநாயக ஆட்சியை கொண்டு வர வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் குதித்தனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்படுவது வாடிக்கையானது.

    இந்த நிலையில் பொதுத்தேர்தலை நடத்தும்படி கடந்த மாதம் மன்னர் மகா வஜ்ரலோங்கோன் ஆணை பிறப்பித்தார். அதனை தொடர்ந்தது பிப்ரவரி மாதம் 24-ந்தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    ஆனால் சில காரணங்களால் பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி 500 உறுப்பினர்களை கொண்டு தாய்லாந்து நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் (மார்ச்) 24-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் பொதுத்தேர்தல் என்பதால் அரசியல் கட்சியினரிடமும், தாய்லாந்து மக்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தாய்லாந்து இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று உப்லோரட்டனா மஹிடோல் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    முன்னாள் பிரதமர்கள் யிங்லக் ஷினவத்ரா, தாக்‌ஷின் ஷினவத்ரா ஆகியோருக்கு ஆதரவான தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு கட்சியின் வேட்பாளராக அவர் களம் இறக்கப்பட்டு உள்ளார்.

    இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்த சில மணி நேரத்தில் தற்போதைய பிரதமர் பிரயாட் சான்ஓசா தானும் களத்தில் இருப்பதாக அறிவித்தார்.

    இதனால் இந்த பொதுத்தேர்தல் முன் எப்போதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. உப்லோரட்டனா மஹிடோல் முன்னாள் மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜின் கடைசி மகளும், தற்போதைய மன்னர் மஹா வஜ்ரலோங்கோனியின் சகோதரியும் ஆவார்.#UbolratanaMahidol
    பிரதமர் பதவிக்கு தான் போட்டியிட போவதில்லை என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். #AkhileshYadav #PrimeMinister
    லக்னோ:

    சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், லக்னோவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதிய பிரதமருக்காக நாடு காத்திருக்கிறது. மோடியை தவிர, வேறு பிரதமர் வேட்பாளர் இருந்தால், பா.ஜனதா அவரை முன்னிறுத்தட்டும். தேர்தல் முடிந்த பிறகு, எதிர்க்கட்சிகளிடம் எத்தனை பிரதமர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிய வரும். ஆனால், நான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #AkhileshYadav #PrimeMinister
    நாட்டின் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு ஒரு முறை கிடைத்தும் அதனை கருணாநிதி உதறி தள்ளினார் என்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசினார். #Karunanidhi #PChidambaram
    சென்னை:

    சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அயனாவரத்தில் நடந்த “கலைஞருக்கு தோழமை வணக்கம்” கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-

    இந்திய வரலாற்றை கருணாநிதியின் பெயரைக் குறிப்பிடாமல் எழுத முடியாது. அந்த அளவுக்கு தமிழகத்தில் இருந்து இந்திய அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளார்.

    தமிழகத்தில் கடந்த 100 ஆண்டுகளில் சிந்தனை மாற்றங்கள் செய்தவர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி. 50 ஆண்டுகளாக தமிழர்களுக்காக எழுதியும், பேசியும் வந்தவர் கருணாநிதிதான். அவருக்கு நிகரான தலைவராக யாரையும் குறிப்பிட முடியாது.

    அம்பேத்கர், டாவின்ஸி போல பன்முக ஆற்றல் மிக்கவர். அவரது “பரா சக்தி” படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று ராஜாஜி குரல் கொடுத்தார். ஆனால் அப்போது தடை விதிக்கப்படவில்லை.

    அந்தப் படத்தின் வசனத்தை அனைவரும் மனப்பாடமாகச் சொல்வார்கள். அதே படம் இப்போது வெளிவந்தால் படத்துக்கு தடையே விதித்திருப்பார்கள் என்று சொல்லும் அளவிலான ஆட்சிகள் தான் தற்போது மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெற்று வருகின்றன.

    நாவல்கள், கடிதங்கள், அறிக்கைகள், கவிதைகள் என தமிழ் மக்களுக்காக அவருடைய 80 ஆண்டுகால பொது வாழ்க்கையில் 78 ஆண்டுகள் தொடர்ந்து எழுதியுள்ளார்.


    எதிர்காலத்தில் கருணாநிதியின் எழுத்துக்களை ஆய்வு செய்பவர்கள் இதையெல்லாம் ஒரே மனிதரா எழுதினார் என்று வியப்பார்கள். அதுவும் முதல்- அமைச்சராக 5 முறைக்கு மேல் இருந்து கொண்டு எப்படி இதையெல்லாம் எழுதினார் என்று ஆச்சரியப்படுவர்.

    அதே நேரம் எல்லா ஆட்சியையும் விட சிறப்பான ஆட்சியையும் கொடுத்துள்ளார்.

    நாட்டின் பிரதமராக ஆவதற்கான வாய்ப்பு ஒரு முறை அவருக்கு கிடைத்துள்ளது. ஆனால், என் உயரம் எனக்குத் தெரியும் என்று பிரதமர் பதவியை ஏற்க மறுத்து விட்டார். வேறு யாரும் இது போல் சொல்லியிருக்க மாட்டார்கள்.

    தற்போது தி.மு.க.வின் தலைமைக்கும் ஸ்டாலினைக் கொண்டு வந்து நல்லதொரு முடிவைத் தந்து சென்றுள்ளார். வரும் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறும் என்று எங்களின் அகில இந்திய தலைமையும் உறுதியாகத் தெரிவித்துள்ளது.

    இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

    விழாவில் பி.கே.சேகர் பாபு, ரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Karunanidhi #PChidambaram #DMK #Congress
    பிரதமர் பதவிக்கு தகுதியானவர் யார்? என்பது குறித்து தந்தி டி.வி. நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. #ThanthiTVOpinionPoll #Modi #Rahul
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) மே மாதத்துக்குள் தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இந்த தேர்தலில் தமிழகத்தின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும்.

    இந்த சூழ்நிலையில் ஜூலை 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் தந்தி டி.வி. கருத்து கணிப்பு நடத்தியது. 8,250 பேர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மக்கள் தெரிவித்த பதில்கள் பல்வேறு புதிய தகவல்களை அளிக்க கூடியவையாக இருந்தன.

    தற்போது தேர்தல் நடந்தால், பிரதமர் பதவிக்கு தகுதியானவர் யார்? என்று மக்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதில் கணிசமானவர்கள் ராகுலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மக்களிடையே ராகுலுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதாவது பிரதமர் பதவிக்கு மோடியை ராகுல் காந்தி முந்துகிறார் என்ற அதிரடி தகவலை மக்கள் தெரிவித்தனர்.

    இன்றைய தேதியில் தேர்தல் நடைபெற்றால் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மற்றும் அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு எவ்வளவு? என்றும் மக்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

    அ.தி.மு.க. வாக்குகளில் சிறிதளவு டி.டி.வி.தினகரனுக்கு செல்லும் என்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில் ரஜினி, கமல், பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க. மற்றும் சிறிய கட்சிகள் 4-ல் 1 பங்கு வாக்குகளைப் பிரிக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன.


    இப்போது பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தினால் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வாக்குகள் சிதறும் சூழ்நிலையில் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்போம் என்பது பெரும்பாலான மக்களின் எண்ண ஓட்டமாக உள்ளது.

    பண மதிப்பு இழப்பு நடவடிக்கை, நீட் தேர்வு போன்ற கொள்கைகளில் மத்திய அரசு மீது மக்களின் அதிருப்தி போன்ற பல அதிர்ச்சிகரமான தகவலை பொதுமக்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.

    மக்களின் எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் “தந்தி” டி.வி.யின் இந்த கருத்து கணிப்பு விவரங்களை இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் “மக்கள் யார் பக்கம்” என்ற சிறப்பு நிகழ்ச்சியில் காணலாம். #ThanthiTVOpinionPoll #Modi #Rahul
    வருகிற 2019-ம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் இன்று கூறியுள்ளார். #AkhileshYadav
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரில் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களை சந்தித்து இன்று பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது, பிரதமராக வேண்டும் என்ற நோக்கமோ அல்லது கனவோ எனக்கு இல்லை.  மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் சாலை மற்றும் மெட்ரோ ஆகியவற்றை அமைப்பது என்ற கனவுடன் இருக்கவே நான் விரும்புகிறேன்.

    வருகிற மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் எனது தொண்டர்கள் இணைந்து பணியாற்றும்படி நான் கேட்டுகொண்டுள்ளேன். மத்தியில் எதிர்க்கட்சிகள் அதிகாரத்தினை பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். #AkhileshYadav
    கோவாவில் பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி பங்கேற்று பேசுகையில், 2019 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவி காலி இல்லை என தெரிவித்துள்ளார். #PMPost #MukhtarAbbasNaqvi
    பனாஜி:

    மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பாக பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், கோவாவில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாட்டு மக்களுக்கு தேவையான நல்லாட்சியை வழங்கி வருகிறார்.

    பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு கூட்டணி அமைத்துள்ளன. அதில் 20-க்கு மேற்பட்டோர் பிரதமர் பதவிக்கான கனவுகளில் உள்ளனர்.

    ஆனால், அவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவி காலியாக இல்லை. ஏனெனில், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உள்ளது என தெரிவித்தார். #PMPost #MukhtarAbbasNaqvi
    ×